கவர்ச்சியில் எல்லை தாண்டிய நடிகை நந்திதா ஸ்வேதா… வைரலாகும் படுக்கை அறை புகைப்படங்கள்…!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய “அட்டகத்தி” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, “இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படம் சூப்பர் ஹிட்டானது. அதில் ‘குமுதா’ என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ‘எதிர் நீச்சல்’, ‘முண்டாசுப்பட்டி’ போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார். இதனையடுத்து விஜய்யின் ‘புலி’ படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார். 

தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம் வரும் நந்திதா, மார்டன் உடைகளில் தான் எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். ஹோம்லி லுக்கில் குடும்ப பெண்ணாக வலம் வந்த நந்திதா வெளியிடும் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிவப்பு நிற புடவையில் இடையழகை காட்டிய படி நந்திதா ஸ்வேதா வெளியிட்ட புகைப்படங்களால் சோசியல் மீடியா பற்றி எரிந்தது. 

சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக வலம் வரும் நம்ம அட்டகத்தி நாயகி, சமீப காலமாக விதவிதமான மார்டன் உடைகளில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். குறிப்பாக குட்டை டவுசரில் அவர் பதிவிட்ட புகைப்படங்கள் லைக்குகளை வாரிக்குவித்தன.

இதனிடையே, படுக்கை அறையில் நந்திதா ஸ்வேதா நடத்தியுள்ள ஹாட் போட்டோ ஷூட் இளசுகளை கிறங்கடிக்க வைத்துள்ளது. குட்டை டவுசரில் தனது கால் அழகு முழுவதும் தெரியும் படியாக அசத்தல் போஸ்களை கொடுத்து கிறக்கடித்துள்ளார். கவர்ச்சியில் அடுத்த எல்லைக்கு போயுள்ள நந்திதா ஸ்வேதாவின் அந்த ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. 

Last Updated 13, Jan 2020, 5:36 PM IST

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


%d bloggers like this: